காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 21-09-2019


*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*
21-09-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள் எண் - 755*

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

மு.வ உரை:

அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

கருணாநிதி  உரை:

பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக.

*பொன்மொழி*

நாம் மேலான எண்ணங்களை பேணி வளர்க்க வேண்டும்.அப்பொழுது தான்செயல்திறனை வளர்த்துக் கொள்ள முடியும். நேர்மையான முறைகளே நமது வாழ்க்கைக்கு வழிகாட்டி ஆகும்.

  - அப்துல் கலாம்

*Important  Words*

Gorilla  மனிதக் குரங்கு

Green Snake  பச்சைப் பாம்பு

Hind  பெண்மான்

Hippopotamus  நீர் யானை

Hog  காட்டுப் பன்றி

*பழமொழி மற்றும் விளக்கம்*

*குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா?*

விளக்கம் :

எங்கிருந்தாலும் உயர்ந்த விஷயங்கள் உயர்ந்த விஷயங்களாகவே இருக்கும். இடத்தைப் பொருத்து அதன் தன்மையோ தரமோ மாறாது என்பதற்காக சொல்லப்பட்ட விஷயம்தான் இது. ஆனால் இங்கு சரியாக சொல்லப் போனால் இந்தப் பழமொழியின் வடிவம் குப்பையில் கிடந்தாலும் குன்றி மணி நிறம் போகுமா என்று வரவேண்டும். உச்சரிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பழமொழியின் அந்த குறிப்பிட்ட வார்த்தை வடிவம் மாறி விட்டது. இருப்பினும் குண்டுவோ குன்றியோ இங்கு பழமொழி தரும் விளக்கம் மாறிப்போக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*பொது அறிவு*

1) சூரியனின் வெப்பநிலையை காண உதவும் விதி?

*ஸ்டீபனின் நான்மடி விதி*

2) மின்தடையை அளக்கும் கருவி?

*ஓம் மீட்டர்*

*விடுகதை*

1.ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்து விட்டால் மறுபடி இயங்காது. அது என்ன?

*இதயம்*

2. இருந்த இடத்தில், நகர்ந்த படி இரவும் பகலும் செல்வான். அவன் யார்?

*கடிகாரம்*

*இன்றைய கதை*

கல்வியின் பெருமை

பண்ணையார் ஒருவர் தன் ஆறு வயது மகனுடன் ஆசிரியரிடம் வந்தார். இவன் என் ஒரே மகன். இவனுக்கு நீங்கள் கல்வி கற்றுத்தர வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு ஆசிரியர், நூறு பணம் தாருங்கள். நன்றாக கல்வி கற்றுத் தருகிறேன். இவன் பேரும், புகழும் பெற்று விளங்குவான் என்றார் ஆசிரியர்.

ஆ! நூறு பணமா? அந்தப் பணத்திற்கு நல்ல ஒரு எருமை மாடு வாங்கலாமே என்றார் பண்ணையார். வாங்குங்கள். உங்கள் பண்ணையில் ஐம்பத்து இரண்டு எருமை மாடுகள் உள்ளன. இப்படி மற்றவரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றார்.

ஆசிரியரான உங்களுக்குக் கணக்கு தெரியாதா? என்னிடம் ஐம்பது மாடுகள் உள்ளன. ஒரு மாடு சேர்ந்தால், ஐம்பத்து ஒன்று தானே ஆகும். எப்படி ஐம்பத்து இரண்டு வரும்? மாடுகள் கணக்கில் உங்கள் மகனைச் சேர்க்கவில்லையே அவனையும் சேர்த்தால் ஐம்பத்து இரண்டு ஆகும்.

என் மகனை மாடுகள் கணக்கில் சேர்க்க அவன் என்ன மாடா? இப்படி பேச உங்களுக்கு என்ன துணிச்சல்? என்று கோபத்துடன் கேட்டார் பண்ணையார். கல்வி கற்றவன் மனிதன். படிக்காதவன் மாடு, மரம் போன்றவன். இது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார் ஆசிரியர்.

என்னை மன்னியுங்கள். கல்வியின் பெருமையை உங்களால் தெரிந்து கொண்டேன். நீங்கள் கேட்ட பணம் தருகிறேன். இவனுக்கு நன்றாக கல்வி கற்றுத் தாருங்கள். சிறந்த மனிதனாக இவனை மாற்றுங்கள் என்றார் பண்ணையார். அப்படியே செய்கிறேன் என்றார் ஆசிரியர்.

நீதி :
மனிதனுக்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம்.

T.தென்னரசு,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
TN டிஜிட்டல் டீம்

*செய்திச் சுருக்கம்*

🔮சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் புதிய சட்டம் - மத்திய அரசு தகவல்.

🔮மீண்டும் மீண்டும் தோல்வி: ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியாமல் பாகிஸ்தான் ஏமாற்றம்.

🔮பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் இன்று சீன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

🔮ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம்- அமைச்சர் செங்கோட்டையன்.

🔮உலக குத்துச்சண்டை போட்டி: இந்தியாவின் அமித் பன்ஹால் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்.

🔮Govt. cuts corporate tax to spur investment, jobs.

🔮Railways misusing discretionary recruitment power, claim unions.

🔮Tens of thousands join global climate protests before UNGA summit.

🔮TNIE Exclusive: Theft of hardware from under-construction INS Vikrant could be more serious than thought.

🔮World Boxing Championships: Amit Panghal becomes first Indian to enter finals.

காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் school morning prayer activities20-09-2019

*இன்றைய திருக்குறள்*

*குறள் எண்- 823*

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் 
ஆகுதல் மாணார்க் கரிது.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் .school morning prayer activities19.09.2019 - வியாழன்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் .

19.09.2019 - வியாழன்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் school morning prayer activities.

18.09.2019 - புதன்.
திருக்குறள்
அதிகாரம்:கள்ளாமை
திருக்குறள்:282

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் .School morning prayer activities

செப்டம்பர் 17
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்

10 th social science timeline new syllabus

காலக்கோடு
1 அலகு = 10 ஆண்டுகள்
       இந்திய தேசிய இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள் (1900-1947)
1905- வங்கப்பிரிவினை / சுதேசி இயக்கம்
1906 - சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்டது
1916 - தன்னாட்சி இயக்கம் / லக்னோ ஒப்பந்தம்
1917 - சம்பரான் சத்தியாகிரகம்
1918 - கேதா சத்தியாகிரகம்
1919 - ரௌலட் சட்டம் / ஜாலியன்வாலா பாக் படுகொலை
1920 - கிலாபத் இயக்கம் / ஒத்துழையாமை இயக்கம்
1922- சௌரி சௌரா சம்பவம்
1923 - சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்
1927 - சைமன் குழு நியமனம்
1928 - மோதிலால் நேரு அறிக்கை
1929 - லாகூர் காங்கிரஸ் மாநாடு
1930 - உப்பு சத்தியாகிரகம் / முதல் வட்டமேசை மாநாடு
1931- காந்தி-இர்வின் ஒப்பந்தம் / இரண்டாவது வட்டமேசை மாநாடு
1932- வகுப்புவாரி பிரதிநிதித்துவம் / பூனா ஒப்பந்தம் / மூன்றாவது வட்டமேசை மாநாடு
1935 - இந்திய அரசு சட்டம்
1937- மாகாணங்களில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்படுதல்
1940 - ஆகஸ்ட் நன்கொடை / தனிநபர் சத்தியாகிரகம்
1942 - கிரிப்ஸ் தூதுக்குழு / வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1945- வேவல் திட்டம் / சிம்லா மாநாடு
1946 - ராயல் இந்திய கப்பற்படை புரட்சி / அமைச்சரவை தூதுக்குழு வருகை / இடைக்கால அரசு
1947- மௌண்ட்பேட்டன் திட்டம் / இந்தியா விடுதலை பெறுதல்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.09.19 school morning prayer activities

இன்று உலக ஓசோன்தினம
 

Sidebar One